வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (12/09/2017)

கடைசி தொடர்பு:17:50 (12/09/2017)

'வந்தேமாதரம்’ கோஷத்துடன் பாரதியார் வீட்டுக்கு சென்ற இளம் பாரதிக்கள்! 

பாரதி 96வது நினைவு தினம்

பாரதி நினைவு அறக்கட்டளை, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் எட்டயபுரம் பாரதி அரிமா சங்கம் ஆகியவை சார்பில் எட்டயபுரத்தில் பாரதி நினைவு தினமான இன்று பாரதியார் மணி மண்டபத்திலிருந்து பிறந்த வீட்டுக்கு இளம் பாரதிகள் ஊர்வலமாகச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 96-வது நினைவு தினத்தை முன்னிட்டு பாரதியின் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் மணிமண்டபத்தில் உள்ள பாரதியின் திருவுருவச் சிலைக்கு பாரதி வேடமணிந்த 96 பள்ளி மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் மலர் தூவி மரியாதை செய்தனர். பின், பாரதியின் சிலை முன்பு நாட்டின் அனைத்து தரப்பு மக்களிடமும் தேசப்பற்றையும், தேசப் பக்தியையும் வளர்க்கும் விதமாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மாணவர்கள் ஊர்வலம்

மணிமண்டபத்திலிருந்து இளம்பாரதிக்கள் எட்டயபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ’வந்தேமாதரம்’ என்ற கோஷம் எழுப்பியும், பாரதியின் பாடல்களைப் பாடிய படியும் பாரதியின் பிறந்த வீட்டுக்குச் சென்று அனைத்து மாணவ- மாணவிகளும் வரிசையாக பாரதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

மாணவர்காள் உறுதிமொழி

பாரதியார் வேடமிட்டு ஊர்வலத்தில் கலந்துகொண்ட எட்டயபுரம் தமிழ் பாப்பிஸ்து ஆரம்பப்பள்ளி மற்றும் மாரியப்பநாடார் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 96 மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இன்று மாலையில் பாரதியார் மணிமண்டபத்தில் பாரதியின் சிறப்பு குறித்த சொற்பொழிவும், கவியரங்கமும் நடக்கிறது. மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பாரதியின் இல்லம் மற்றும் மணிமண்டபத்திலுள்ள சிலைக்கு மலர் தூவி வணங்கிச் சென்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க