Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கர்நாடக ரிசார்ட்டுக்கு தமிழக போலீஸ் வருகை ஏன்? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ பேட்டி

 

மிழகத்தில் நடந்து வரும் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. இதனால் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோன்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், ஆளுநரை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதன்பின்னர் புதுச்சேரிக்கு சென்ற எம்.எல்.ஏ-க்கள், பின்னர் அங்கிருந்து கர்நாடக மாநிலம் குடகுக்குச் சென்றனர். அங்குள்ள ரிசார்ட்டில் அவர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று கூடிய அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் விரைந்த தமிழக போலீஸார், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள குடகு விடுதிக்குச் சென்று விசாரணை செய்துவருகின்றனர். போலீஸாரின் இந்த நடவடிக்கை குறித்து அங்கு தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வனைத் தொடர்புகொண்டு பேசினோம். "தமிழகத்திலிருந்து 200 போலீஸார் இங்கு வந்துள்ளனர். எங்களுடன் தற்போது அமர்ந்து போலீஸார் டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இங்கு தங்கியுள்ள 19 எம்.எல்.ஏ-க்களும் தங்களது சுய விருப்பத்தின் பேரில்தான் தங்கியுள்ளனர். எங்களுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதற்காக கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் அமைந்துள்ள இந்த விடுதிக்கு வந்து தங்கியுள்ளோம். எதற்காக இங்கே போலீஸார் வந்தார்கள் என்பது தெரியாது. முதல்வருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரும் விவகாரத்தில் அடுத்த கட்டமாகக் குடியரசுத் தலைவரைச் சந்தித்துப் பேச உள்ளோம். அதன் பின்னரே எங்களது இறுதிமுடிவை எடுக்க உள்ளோம். எடப்பாடி பழனிசாமி அணியிலிருந்து இன்னும் எம்.எல்.ஏ-க்கள் தினகரன் அணிக்கு வர உள்ளனர். இன்று நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை நீக்கியிருப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சசிகலாவை நீக்கும் அதிகாரம் அங்குள்ள யாருக்குமில்லை" என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close