Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'விதிகளின்படி சசிகலாவை நீக்க முடியாது!'  - முதல்வருக்கு ஜெயானந்த் பதிலடி

அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியும் தினகரனின் அறிவிப்புகள் செல்லாது என்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ' சசிகலாவால் நீக்கப்பட்ட காரணத்தாலேயே, அவருடைய பதவி செல்லும் என்பதையே குறிக்கிறது' என்கிறார் திவாகரன் மகன் ஜெயானந்த். 

ADMK general council

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு எதிராக, எம்.எல்.ஏ-க்கள் 19 பேரை கர்நாடகாவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைத்திருக்கிறார் தினகரன். இவர்கள் மூலம் ஆட்சி அதிகாரத்துக்குச் சிக்கல் ஏற்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. 'இரண்டு நாள்களுக்குள் ஆளுநர் முடிவை அறிவிக்க வேண்டும்' எனவும் வேண்டுகோள் வைத்திருக்கிறார் தினகரன். ' பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என தி.மு.கவும் வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

இன்று நடந்த அ.தி.மு.க பொதுக்குழு குறித்துப் பேட்டியளித்த தினகரன், ' நடந்தது கூட்டம்தான். பொதுக்குழு அல்ல' என விமர்சித்தார்.

jeyanandh
இந்நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள திவாகரன் மகன் ஜெயானந்த், ' எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் இணைந்து பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியுள்ளது எதைக் குறிக்கிறது? சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி செல்லும் என்பதையே குறிக்கிறது. சசிகலா பொதுச்செயலாளராக இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரைக் கட்சியில் இருந்து நீக்கிவிட்டார். தலைமை நிலையச் செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியையும் நீக்கினார். கட்சியிலிருந்து பொதுச்செயலாளரால் நீக்கப்பட்ட உறுப்பினர்கள் எப்படி அதே பொதுச்செயலாளரை கட்சியிலிருந்து  நீக்க முடியும்? பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சசிகலாவை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டனர். அவரைப் பதவியில் இருந்து நீக்குவது எம்.ஜி.ஆர் வகுத்த கட்சி விதிகளின்படி செல்லாது' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


எடப்பாடி பழனிசாமி அணியில் இருப்பவர்களை ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருப்பவர்கள் பதவியைவிட்டு நீக்கி அறிவிப்புகள் வெளியிட்டனர். எடப்பாடி அணி ஓ.பி.எஸ் அணியில் இருப்பவர்களை கட்சியை விட்டு நீக்கி அறிவிப்புகள் வெளியிட்டன. அண்மையில் இரு அணிகளும் இணைந்துவிட்டன. இந்த இணைப்புக்கு பிறகு எடப்பாடி-ஓ.பி.எஸ் அணியில் உள்ளவர்களை தினகரன் அ.தி.மு.க-வை விட்டு நீக்குவதாக அறிவிப்புகள் வெளியிட்டார். இத்தகைய குழப்பமான சூழலில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் இன்று நடந்து முடிந்தது. பொதுக்குழுவில் அ.தி.மு.க-வின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் ரத்து செய்யப்படுவதாக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close