Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஆடையைக் களைந்து சோதித்தார்கள்!’ - கொதிக்கும் திருநங்கை கிரேஸ் பானு

நீட் தேர்வு முறைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி சிறை சென்ற திருநங்கை கிரேஸ் பானு, சிறையில் நடத்தப்பட்ட அதிர்ச்சி சோதனையை விவரித்துள்ளது சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

grace banu
 

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்குப் பிறகு, நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 7-ம் தேதி திருநங்கை கிரேஸ் பானு உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கிண்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள மத்திய அரசின் அறிவுச் சொத்துரிமை அலுவலகத்துக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. நேற்று இரவு சிறையில் இருந்து விடுதலையான திருநங்கை கிரேஸ் பானு, சிறையில் நடந்த கசப்பான அனுபவங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். 

grace banu

கிரேஸ் பானுவிடம் பேசினோம். "நீட் தேர்வுக்கு எதிராகவும் அதற்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்களைக் கைது செய்த அன்று, ஒருநாள் முழுவதும் அலைக்கழிக்க வைத்துவிட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது போலீஸ். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டோம். சிறைக்குள் நுழைவதற்கு முன்பு சிறையில் இருந்த பெண் காவலர்கள், என்னையும் உடன் வந்த தோழியிடமும், 'ஆடை இல்லாமல் சோதனை செய்ய வேண்டும்' என்றனர், 'எதற்காக இப்படியொரு சோதனை?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'உங்களைப் பெண்கள் சிறையில் அடைக்க வேண்டுமென்றால் நீங்கள் உண்மையில் பெண்ணாக மாறும் அறுவைசிகிச்சை செய்துகொண்டீர்களா என்பதை சோதிக்க வேண்டும்' என்றனர். 'இவ்வாறு சோதனை நடத்த எந்தச் சட்டத்தில் இடம் உள்ளது என்று தெரியவில்லை. 

இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் பெண்ணாக மாறியதற்கான சான்றிதழைக் கொண்டு வந்திருப்போம்' என எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தோம். அதையும் மீறி, இரண்டு பெண் காவலர்கள் எங்கள் ஆடைகளை அகற்றி சோதனை செய்தனர். சோதனை என்னும் பெயரில் சிறையில் நடந்த இந்தக் கசப்பான நிகழ்வு, என் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்திவிட்டது. சோதனை நடத்திய பிறகு, அந்தப் பெண் காவலர் என்னை ஏளனத்துடன் பார்த்து சிரித்தார். அது என்னுடைய வேதனையை அதிகப்படுத்திவிட்டது. ''எங்க ஆப்ரேஷன் பண்ணின?” என சிரித்தபடியே கேட்டார். சோதனைக்குப் பிறகு எங்களைp பெண்கள் சிறையில் அடைக்காமல், தொற்று நோயாளிகள் அடைபட்டிருக்கும் கொட்டடியில் அடைத்தார்கள். மக்களுக்காகப் போராடிய எங்களைத் திருநங்கைகளா என நிர்வாண சோதனை நடத்தி அவமானப்படுத்திவிட்டது இந்த அரசு" எனக் கொந்தளிப்போடு பேசி முடித்தார். 


 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close