Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'விரைவில் உண்மையான பொதுக்குழு கூட்டப்படும்'- திவாகரன் அதிரடி

'இன்று நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவின் முடிவுகள் எங்களைக் கட்டுப்படுத்தாது. சீக்கிரமே உண்மையான பொதுக்குழு கூட்டப்படும்' என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

திவாகரன்

ஆட்சிக்கு எதிராக தினகரன் தரப்பும் எதிர்க்கட்சியினரும் போர்கொடி தூக்கிவரும் சூழ்நிலையில், அ.தி.மு.க பொதுக்கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அ.தி.மு.க-வின் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் ரத்துசெய்யப்படுவதாக அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது எனவும், ஜெயலலிதா நியமித்த உறுப்பினர்கள், கட்சிப் பொறுப்புகளில் நீடிப்பார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து திவாகரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 'எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் இல்லாத அமைச்சரவை அமைய வேண்டும். மேலும், ஊழல் அமைச்சர்களும் அமைச்சரவையைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும். சசிகலாவை நீக்க தீர்மானம் நிறைவேற்றியதைப் பற்றி நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். இவர்கள் கூட்டும் பொதுக்குழுவுக்கு அவரை நீக்கும் அதிகாரம் கிடையாது. அவர்கள் செய்தது மிகவும் தவறு. பொதுக்குழுவை கூட்டியவர்களுக்கு ஏகப்பட்ட குழப்பம் இருந்திருக்கிறது. தினகரன் நியமனம் செல்லாது என்று அவர்கள் சொல்ல முடியாது. தொண்டர்களின் ஆதரவு தினகரன் நியமித்தவர்களுக்குத்தான் இருக்கிறது. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே அதிகாரத்தில் இருக்க முடியும். 95 சதவிகித கட்சி எங்கள் கையில்தான் இருக்கிறது. சில காரணங்களுக்காக எம்.எல்.ஏ-க்கள் அந்தப் பக்கம் இருக்கலாம். மற்றப்படி கட்சி எங்கள் கையில்தான் இருக்கிறது. பதவியை கையில் வைத்துக்கொண்டுதான் அந்தப் பக்கம் ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள். சீக்கிரமே உண்மையான பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும். பொதுச் செயலாளரான சசிகலாவிடம் இருந்து அனுமதி வாங்கி பொதுக்குழு கூட்டப்படும். பொதுக்குழுவுக்கான தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close