Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தி.மு.க-வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!' - ஹெச்.ராஜா அறிவிப்பு

நீட் தேர்வுக்கு எதிரானப் போராட்டங்கள் தமிழகத்தில் நாளுக்கு, நாள் தீவிரமடைந்து வருகின்றன. இதையொட்டி தி.மு.க சார்பில் கடந்த 8-ம் தேதி திருச்சியில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக, வருகின்ற 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, 'நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தவுள்ள தி.மு.க-வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என்று கூறியுள்ளார். 

ஹெச்.ராஜா


 
இதுகுறித்து அவர் மேலும், 'நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் அறிவித்துள்ள தி.மு.க-வைக் கண்டித்து வரும் 15-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் பயனடைந்துள்ளனர். ஆளுநரைப் பற்றிப் பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை. அவருக்கு தகுதியில்லை என்பதால்தான் கருணாநிதி தலைவர் பதவியை இன்னும் தரவில்லை. தமிழகத்தில் ஏதேதோ காரணங்களைச் சொல்லி போராட்டம் நடத்தப்படுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது' என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement