மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைக் குறைக்க செபி திட்டம்! 

இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி (Securities and Exchange Board of India), மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

செபி

மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை, 2,000-க்கும் அதிகமான முதலீட்டுத் திட்டங்களை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதனால் முதலீட்டாளர்களுக்கு முடிவுகளை எடுப்பதில் பிரச்னையாக இருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில், முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை குறைக்கச் செபி முன்வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. 
அதன்படி, தற்போது கடுமையான வரையறைகளைக் கொண்டு வரச் செபி திட்டமிட்டுள்ளது. செபியின் மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசனைக் குழு, ஒவ்வொரு பிரிவிலும் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வகைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. பரிந்துரையின் படி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஈக்விட்டி, கடன் எனப் பிரிக்கப்பட உள்ளன. பின்னர் அவை லார்ஜ் கேப் மற்றும் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் எனப் பிரிவு வாரியாக பிரிக்கப்பட உள்ளன. இறுதியாக மூலதன சந்தையின் ஒழுங்குபடுத்தும் நோக்கில் மியூச்சுவல் ஃபண்ட்களை நிர்வகித்து வரும் நிறுவனங்கள் ஒவ்வொரு பிரிவிலும் ஒரே ஒரு தயாரிப்புகளை மட்டுமே கொண்டு வரத் திட்டமிட்டுள்ளன. இந்தப் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால் தற்போது செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!