Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் ஆவியும் காவியுமா ஆட்சி  நடத்தும்? - திருநாவுக்கரசர் கேள்வி


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசும்போது,  ''அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நிரந்தரப் பொதுச் செயலாளர் எனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இறந்தவர் எப்படிப் பொதுச்செயலாளாராக இருக்க முடியும்? ஆவியா கட்சி நடத்தும்? மாநிலக் கட்சியானாலும் அகில இந்தியக் கட்சியானாலும் அதை வழி நடத்த தலைவர் வேண்டும்.  அ.தி.மு.க-வில் பொதுச் செயலாளர் பதவியில் ஓ.பி.எஸ். இருக்கலாம், அல்லது தினகரன் இருக்கலாம். ஆனால் அந்தப் பதவியே இல்லையென்பது எப்படி?

திருநாவுக்கரசர்

தற்போது ஆட்சியையும், கட்சியையும் ஆவியும் காவியும்தான் வழி நடத்துகிறது. இந்த ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதான். முதல்வர் ஈ.பி.எஸ்,  சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு ஆட்சியை நடத்தவேண்டும். இந்த ஆட்சி பி.ஜே.பி-யால் செயல்படுத்தபடும் ஆட்சி. ஆளுநரிடம் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் மனு கொடுத்துள்ளோம். ஆளுநர்  சட்டமன்றத்தைக் கூட்டச் சொல்ல வேண்டும் , பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லவேண்டும், நல்ல முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம் அப்படி இல்லையென்றால் நீதிமன்றம் செல்வதா, இல்லை,  மக்களைச் சந்திப்பதா என்பதை ஸ்டாலின் மற்றும் அனைத்துக் கட்சியினரும் முடிவு செய்வோம்''  என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close