வரலாற்றிலேயே அதிகச் சம்பளம் வாங்கும் பெண் இயக்குநர் இவர்தான்!

உலக சினிமா வரலாற்றில் அதிகச் சம்பளம் வாங்கும் பெண் இயக்குநராகப் பெட்டி ஜெங்கின்ஸ் சாதனை படைத்துள்ளார். கலிஃபோர்னியாவில் பிறந்த அமெரிக்காவைச் சேர்ந்த பெட்டி ஜெங்கின்ஸ் இதுவரை இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். 2003-ல் மான்ஸ்டர் என்ற படத்தை இயக்கிய இவர் அதன் பிறகு 14 ஆண்டுகள் கழித்துதான் வொன்டர் வுமன் படத்தை இயக்கி வெளியிட்டார்.

பெட்டி

இதற்கிடைப்பட்ட காலத்தில் பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களை இயக்கி வந்தார். தற்போது வொண்டர் வுமன் இரண்டாம் பாகத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இவருக்கு 7 மில்லியன் முதல் 9 மில்லியன் டாலர் வரை சம்பளம் தரப்பட வாய்ப்புள்ளதாம். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ. 44 முதல் 57 கோடி வரை ஆகும். இவர் இயக்கிய வொண்டர் வுமன் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு இந்தச் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அதிகச் சம்பளம் வாங்கும் பெண் இயக்குநராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். வொண்டர் வுமன் இரண்டாம் பாகம் 2019 டிசம்பரில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!