வெளியிடப்பட்ட நேரம்: 02:50 (13/09/2017)

கடைசி தொடர்பு:08:33 (13/09/2017)

காவிரியில் சட்ட விரோத மணல் அள்ளும் வழக்கு. அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கரூர், திருச்சி இடையே காவிரி ஆற்றுப்படுகையில் மணல் குவாரிகள் அதிகம் உள்ளன. குளித்தலை பாலத்தின் அருகே சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகிறது. இதனால் பாலம் ஸ்த்திரத்தன்மை இழந்துவிடும் அபாயம் உள்ளது. திருச்சி கலெக்டரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று சீனிவாசனும், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது, விவசாயம் பாதிக்கிறது, அரசு விதியை மீறி மணல் எடுக்கிறார்கள் என்று சுடலைக்கண்ணு என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், வழக்கறிஞர் கமிஷனர்களையும்,  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக சுற்றுச்சூழல் துறைத் தலைவரையும் நியமித்து காவிரிப்படுகைகளில் ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

மணல்குவாரி

வழக்கறிஞர் கமிஷனர்கள் ஆய்வறிக்கையை நேற்று தாக்கல் செய்தனர். அதில் காவிரிப்படுகை மிகவும் சூரையாடப்பட்டுள்ளதாகவும், காவிரியின் தாய்மடியான கொள்ளிடத்தில் ரத்தத்தை உறிஞ்சி விட்டார்கள் என்றும், இனி அங்கு மணல் எடுப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இனி மணல் குவாரிகள் அங்கு அமைக்கக் கூடாது என்றும்  விரிவாகக் குறிப்பிட்டிருந்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இதற்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க