Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரணியல் அரண்மனையைப் புதுப்பிக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி கோரிக்கை!

குமரி மாவட்டம், தக்கலையை அடுத்த இரணியலில் அமைந்துள்ள அரண்மனையை திருவிதாங்கூர் மலையாளிகளின் அரண்மனை எனக் குறிப்பிட்டு, தமிழர்களின் வரலாற்றையும் தொன்மையையும் மறைக்கும் விதமாக தமிழக அரசும், இந்து அறநிலையத்துறையும், செயல்படுவதாக, நாம்தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம்  வட்டத்துக்கு உட்பட்ட தக்கலை அருகே, கி.பி. 7-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் கோக்கண்ட வீரநாராயணனால் கட்டப்பட்ட இரணியல் அரண்மனை உள்ளது. இந்த அரண்மனை, பராமரிப்பில்லாத காரணத்தால் இடிந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த அரண்மனையைப் புதுப்பிக்க, தமிழக சட்டமன்றத்தில்110 விதியின் கீழ் 3.75 கோடி ரூபாயை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கி, அறிக்கையும் வெளியிட்டார். ஆனால், அந்தப் புனரமைப்புப் பணிகள் இன்று வரை செயல்படுத்தப்படாமல் கிடப்பிலேயே உள்ளது. இதனிடையே, இந்து அறநிலையத்துறை தற்போது, கி.பி 18-ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட திருவிதாங்கூர் மலையாளிகளின் அரண்மனை எனக் குறிப்பிட்டு, தமிழர்களின் வரலாற்றையும் தொன்மையையும் மறைக்க முயல்வதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த நாம் தமிழர் கட்சியினர், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துப் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், "தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திருவிதாங்கூர் அரண்மனை என்ற பெயரை மாற்றி, பாண்டிய மன்னர்களின் கரவந்தபுரம் அரண்மனை என அறிவிப்பை வெளியிட்டு, நிரந்தர அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். மேலும், இந்த அரண்மனையின் பழைமை மாறாமல், உடனே அரண்மனையைப் புதுப்பிக்கும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும்"
என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close