Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் தண்ணீரை நாகர்கோவில் நகராட்சிக்குக் கொண்டுவர எதிர்ப்பு!

விவசாயிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தாமல், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து தண்ணீர் சென்று சேரும் புத்தன் அணையிலிருந்து 242 கோடி ரூபாய் செலவில், நாகர்கோவில் நகராட்சிக்கு நிரந்தரமாகக் குடிநீர் கொண்டுசெல்வதற்கு, பூமி பாதுகாப்பு சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். உடனடியாக இந்தத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து குமரி மாவட்ட பூமி பாதுகாப்புச் சங்கக் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.

குமரி மாவட்டத்தில் விவசாயிகளின் உயிர் நாடியாக இருந்து வருவது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள். இந்த அணைகளின் நீர் மட்டம் குறையும்போதெல்லாம், குமரி மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டுவருகிறது. தற்போது, பல மாதங்களாக மழை இல்லாமல் அணைகளில் நீர் மட்டம் குறைவாக உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள், லட்சக்கணக்கான வாழைமரங்கள், தென்னை மரங்கள் நீரின்றிக் கருகியுள்ளன. இதனால், விவசாயிகள் மனவேதனையில் உள்ள நிலையில், விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி, விவசாயிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்துவோம் எனக் கூறி நடத்தாமல், தற்போது பேச்சிப்பாறை,பெருஞ்சாணி அணைகளிலிருந்து விவசாயத்துக்கு நீர் சென்று சேரும் புத்தன் அணையிலிருந்து 242 கோடி செலவில் நாகர்கோவில் நகராட்சிக்கு நிரந்தரமாகக் குடிநீர் கொண்டுசெல்லும் திட்டத்தைத் தொடங்கியதற்கு, விவசாய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தத் திட்டத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக, நகராட்சிக் குடிநீர்த் திட்டத்துக்காக, முக்கடல் அணையைத் தூர்வாரியும், நிரந்தரத் தண்ணீர் தேவைக்காக உலக்கை அருவி திட்டத்தைச் செயல்படுத்தவும் கேட்டு, குமரி மாவட்ட பூமி பாதுகாப்புச் சங்கக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close