Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்ட 12 தமிழக மீனவர்கள்

tamil fishermen, தமிழக மீனவர்கள்

இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 தமிழக மீனவர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து 12 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலுக்குள் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் அங்கு வந்தனர். சற்றும் தாமதிக்காமல், தமிழக மீனவர்களைத் தாக்கத் தொடங்கினர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, மீனவர்களைக் கைதுசெய்து, அவர்களின் படகுகள் மற்றும் வலைகளையும் பறிமுதல்செய்தனர்.

பின்னர், 12 மீனவர்களும் காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் வரும் 26-ந் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, 12 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பலத்த மழை மற்றும் காற்று காரணமாக எல்லை தாண்டியதாகவும், அப்போது இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்து அழைத்து வந்துவிட்டதாகவும் கைதான தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட 12 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்ந்தால், போராட்டம் வெடிக்கும் எனவும் மீனவர் சங்கங்களின் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close