ரோகிங்கிய முஸ்லிம்கள் படுகொலை: மியான்மரை எச்சரிக்கும் ஷேக் ஹசீனா | Bangladesh PM Sheikh Hasina warns Myanmar on Rohingya Muslims genocide

வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (13/09/2017)

கடைசி தொடர்பு:07:55 (13/09/2017)

ரோகிங்கிய முஸ்லிம்கள் படுகொலை: மியான்மரை எச்சரிக்கும் ஷேக் ஹசீனா

ரோகிங்கிய முஸ்லிம்கள், rohingya muslims

மியான்மரில், ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் தொடர்கிறது. குழந்தைகள், பெண்கள் என வித்தியாசமின்றி அங்கு நடக்கும் படுகொலைகள் உலகையே அச்சத்தில் தள்ளியுள்ளது. இதனால், அங்கிருந்து தப்பித்துவரும் பல ரோகிங்கிய முஸ்லிம்கள், வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், மியான்மர் அரசை வறுத்தெடுத்துவருகிறார், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா.

அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட்டதற்குப் பின்னர் பேசிய ஹசீனா, “ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மர் அரசு பல அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் அரங்கேற்றிவருகிறது. புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ள மியான்மர், அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்த வேண்டும். எங்கள் நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளவர்கள், மீண்டும் மியான்மர் திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள்மீது இழைக்கப்படும் எந்த வகையான வன்முறையையும், அநீதிகளையும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். இந்தப் பிரச்னைக்குத் தொடர்ந்து எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வோம். வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உரிய உதவிகளைச் செய்வோம்”, என்றார்.


[X] Close

[X] Close