ஃப்ளோரிடாவைப் புரட்டிப்போட்ட இர்மா புயல்: 110 இந்தியர்கள் மீட்பு

irma hurricane, இர்மா புயல்

கரீபியன் தீவுகளையும் அமெரிக்காவின் முக்கிய மாகாணமான ஃப்ளோரிடாவையும் சின்னாபின்னமாக்கிவிட்டுச் சென்றிருக்கிறது இர்மா புயல். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய புயல் எனக் கூறப்பட்ட 'இர்மா' விளைவித்த சேதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான இந்த புயல், அமெரிக்காவை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. கரீபியன் தீவுகளைக் காவுவாங்கிய இந்தப் புயல்,  பெரும் சேதங்களை விளைவித்துள்ளது. இந்நிலையில், இர்மா புயலில் சிக்கித்தவித்த இந்தியர்களில், இதுவரை 110 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் சிறப்பு விமானம்மூலம் இவர்கள் மீட்கப்பட்டனர்.

ஃப்ளோரிடாவைத் தொடர்ந்து ஜார்ஜியா, கரோலினாஸ் மாகாணங்களையும் இந்தப் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அங்கு பலத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இர்மா புயல் பாதிப்புகளை அறிவதற்காகவும், இந்தியர்களுக்கு உதவுவதற்காகவும் இந்தியத் தூதரகம் சிறப்பு மையத்தை ஏற்படுத்தியுள்ளது. சிண்ட் மார்டேன் தீவில் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் சிக்கித்தவித்தது தெரியவந்ததும், அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். தொடர்ந்து, தூதரகத் தகவல் மையத்தின் உதவியுடன், சிறப்பு விமானம்மூலம் 110 இந்தியர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கரீபியன் தீவுகளில் ஒன்றான குராகவோவுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!