பேருந்து நிலையங்களுக்கு முட்டுக்கொடுக்கும் பணி தொடக்கம்!

கோவை மாவட்டம் சூலுரில், பேருந்து நிலையத்தைப் பலப்படுத்தும் வகையில் முட்டுக்கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

பேருந்து நிலையக் கட்டடத்துக்கு முட்டு கொடுக்கப்பட்டுள்ளது

கோவை மாவட்டம்  சோமனூர் பேருந்து நிலையக் கட்டடம் இடிந்து விழுந்ததில், ஐந்து பேர் பரிதாபமாகப் பலியானார்கள். இந்தப் பேருந்து நிலையத்தில், சமீபத்தில்தான் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, அருகிலுள்ள சூலூர் பேருந்து நிலையக் கட்டடமும் இடியும் நிலையில் இருப்பதாகத் தகவல் பரவியது.

பயணிகள், பேருந்து நிலையத்தில் கடை வைத்திருப்பவர்கள், மாணவ- மாணவிகளிடையே பயத்துடனே பேருந்து நிலையத்துக்குள் நடமாடி வந்தனர். பெரும்பாலோனார் கட்டடத்துக்குள் செல்லாமல் வெளியே நின்றவாரே பேருந்துகளுக்காகக் காத்திருந்தனர். 

மக்களின் பதற்றத்தைக் குறைக்கும் வகையில், சூலூர் பேருந்து நிலையத்தைப் பலப்படுத்த முட்டுக்கொடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சூலூர் பஞ்சாயத்து ஊழியர்கள், ஆங்காங்கே இடிந்துகிடந்த பகுதிகளில் சிமென்ட் கலவை பூசி பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். எனினும், பொதுமக்களுக்கு அச்சம் குறைந்தபாடில்லை.

ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையக் கட்டடங்களைத் தரமாகக் கட்டாமல், பொதுமக்களின் உயிரைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறைகொள்ளாத ஒப்பந்ததாரர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது. 

கோவை மாவட்டத்தில், தரமற்ற பேருந்து நிலையங்களை அடையாளம் கண்டு, முட்டுக்கொடுக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!