Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடர்ந்து கரை ஒதுங்கும் மாணவர்களின் சடலங்கள்... கண்ணீரில் மிதக்கும் மாமல்லபுரம்!

மாமல்லபுரம் கடலில் குளிக்கச்செல்லும் இளைஞர்கள் பிணமாக ஒதுங்கும் சோகம், அடிக்கடி தொடர்கிறது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை தினங்களில், மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள். அவர்கள், காவல்துறை அறிவிப்பையும் மீறி கடலுக்குள் இறங்கிக் குளிப்பார்கள். அப்படிக் குளிக்கும்போது, ராட்சத அலைகளில் சிக்கி உயிரிழப்பது வாடிக்கையாகிவிட்டது. சில நேரங்களில், இறந்தவர்களின் உடல் மறுநாள்தான் கரை ஒதுங்கும்.

கல்யாண், மாமல்லபுரம்

படூர் பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் பிடெக் படித்துவந்தவர்கள், உபேந்திரன் மற்றும் கல்யாண். ஆந்திராவைச் சேர்ந்த இவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் மாமல்லபுரம் கடற்கரைக்கு குளிக்கச்சென்றனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கி இருவரும் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டனர். நேற்று மாலை, உபேந்திரனின் உடல் கரை ஒதுங்கியது. இன்று காலை, கல்யாண் என்பவரின் உடல் கரை ஒதுங்கியது. இந்தச் சோகம் மறைவதற்குள் அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவத்தால் மீளாத் துயரத்தில் உள்ளது மாமல்லபுரம்.

இன்று (04.09.17) காலை, பொத்தேரியில் உள்ள பாலிடெக்னிக்கில் படிக்கும் விஜய் மற்றும் தனியார் கம்பெனியில் வேலைசெய்யும் கார்த்திக் ஆகியோர் காலை 11 மணிக்கு நண்பர்களுடன் மாமல்லபுரம் கடற்கரைக்கு குளிக்கச்சென்றனர். இதில், கார்த்திக் மற்றும் விஜய் ஆகியோர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்கள். மாலை மூன்று மணியளவில், விஜய்யின் உடல் கரை ஒதுங்கியது. கார்த்திக்கின் உடலை காவல்துறையினர் தேடிவருகின்றனர். இதுபோன்று, கடந்த மாதத்தில் மட்டும் மாமல்லபுரம் பகுதியில் மூன்று பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்கள்.

உபேந்திரன், மாமல்லபுரம்

“காவல்துறையினர் எவ்வளவுதான் எச்சரித்தாலும், இளைஞர்கள் காதில் வாங்கிக்கொள்வதில்லை. காவல்துறையினர் ஓர் இடத்தில் விரட்டினால், இன்னொரு பக்கம் குளிக்கச் செல்பவர்களாக இருக்கிறார்கள். காவல்துறை சார்பாக விழிப்புஉணர்வு பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்படுவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன” என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close