’சுங்கச்சாவடிகளில் ரவுடிகளே ஊழியர்கள்’: உயர் நீதிமன்ற நீதிபதி குற்றச்சாட்டு!

’'சுங்கச்சாவடிகளில், விதி மீறல்களில் ஈடுபடும் ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்'’ என உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சுங்கச்சாவடி

Representative image

சுங்கச்சாவடிகளில், ரவுடிகளே ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்’ என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி குற்றம் சுமத்தியுள்ளார். மேலூரைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவர் தொடுத்த வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி இந்தக் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையில் உயர்நீதிமன்ற நீதிபதி, “சுங்கச்சாவடிகளில் விதிமீறல்களில் ஈடுபடும் ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்... பெரிய நிறுவனங்களிடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதால், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லையா” என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்குத் தனி வழி இல்லை என்றும், முறையான திட்டங்கள் எதுவும் சுங்கச்சாவடிகளில் செயல்படுத்தப்படவில்லை என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி குற்றம் சுமத்தியுள்ளார். முறைகேடுகளுக்கு நடவடிக்கை எடுக்காததற்கான காரணத்தை வினவிய நீதிமன்றம், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!