Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மது விருந்தில் நண்பனைக் கொலைசெய்து புதைத்த நண்பர்கள்!

மதுவிருந்து மூலம் கொலை செய்யப்பட்ட அவினாஷ்பூசன்து விருந்து வைத்து, நண்பனைக் கொன்று புதைத்த நண்பர்கள், போலீஸில் சிக்கினர். முன்னதாக,  நண்பனின் தந்தையிடம் ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரில் வசிப்பவர், அஜய்குமார். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் வேலைபார்க்கிறார். இவர் மகன் அவினாஷ்பூசன் (28). கடந்த 7-ம் தேதி  மதியம் வீட்டிலிருந்து வெளியில் சென்ற அவினாஷ்பூசன்  அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, 'மகனைக் காணவில்லை' என்று சாத்தாங்காடு காவல் நிலையத்தில் அஜய்குமார் புகார் அளித்தார். போலீஸார், அவினாஷ்பூசனின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வுசெய்தனர். இதற்கிடையில், அஜய்குமாரின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட  மர்மக்குரல், 'உங்கள் மகனை உயிரோடு பார்க்க வேண்டுமென்றால், ரூபாய் 50 லட்சத்துடன் நாங்கள் சொல்கிற இடத்துக்கு வர வேண்டும்' என்று மிரட்டிவிட்டு, சில நிமிடங்களில் மீண்டும் போன் செய்வதாகச் சொல்லி, செல்போன் இணைப்பைத் துண்டித்தது.

மர்ம ஆசாமி பணம் கேட்டு மிரட்டியதுகுறித்து போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். மிரட்டல் ஆசாமிகளின் செல்போன்  சிக்னல் காட்டிய திருவொற்றியூர் சடையங்குப்பம் பகுதியைத் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் சுற்றிய சிலரை, 'இவர்கள், என் மகனின் நண்பர்கள்' என்று அஜய்குமார் அடையாளம் காட்டினார். இதையடுத்து போலீஸார், காணாமல் போன அவினாஷ்பூசனின் நண்பர்கள் வெங்கடேசன், ரமேஷ்,  சூர்யா, தினேஷ்குமார்  ஆகியோரிடம்  விசாரணை நடத்தினர். விசாரணையில், "மது விருந்து தகராறில் அவினாஷ்பூசனைக் கொன்று, சடையங்குப்பம் கடற்கரைப் பகுதியில் புதைத்துவிட்டதாக" அவர்கள் தெரிவித்தனர். ' போலீஸார் எப்படியும் நம்மைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று பயம் வந்துவிட்டதால், சடலத்தை வேறு இடத்துக்கு மாற்றிவிடலாம் என்று மீண்டும் அதே பகுதிக்குத் திரும்பி வந்தபோதுதான், போலீஸில் சிக்கிக்கொண்டோம்' என்று  வாக்குமூலத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close