Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஆளுநர் சொன்னதால் காத்திருக்கிறேன்; எந்த எல்லைக்கும் செல்வேன்' - டி.டி.வி.தினகரன் தடாலடி பேட்டி

 தமிழக காவல்துறையை ஏவி, எம்.எல்.ஏ-க்களை மிரட்டுவதாக, டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

dinakaran
 

கர்நாடகா, குடகில் உள்ள  விடுதியில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று, அந்த விடுதியின் உள்ளே சென்று, தமிழகக் காவல்துறை விசாரணை நடத்தியது. அங்கிருக்கும் எம்.எல்.ஏ-க்கள், தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தங்கியிருப்பதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், ‘தமிழக காவல்துறையை அனுப்பி, குடகு விடுதியிலுள்ள எம்.எல்.ஏ-க்களை பொய் வழக்குப் போடுவதாக மிரட்டியுள்ளார்கள். எம்.எல்.ஏக்களை மிரட்டுபவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். உண்மைத் தொண்டர்களை காவல்துறையை ஏவி கைதுசெய்ய நினைக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என காவல்துறையினர் எம்.எல்.ஏ-க்களை மிரட்டுகின்றனர். நேற்று நடந்த பொதுக்குழு, சட்டவிதிகளை மீறி நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா செல்லாதா என்பதை உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும். எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் அணியில் எத்தனை ஸ்லீப்பர் செல் உள்ளனர்  என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆளுநர் என்னை 14-ம் தேதி வரை காத்திருக்குமாறு கூறினார்.  அதுவரை காத்திருப்பேன். கட்சியைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறோம்’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

நீங்கள் கீழே விழுபவரா, கெட்டியாகப் பற்றிக்கொள்பவரா? - பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை! #MotivationStory
Advertisement

MUST READ

Advertisement