’வேலூர் சி.எம்.சி., லயோலா கல்லூரிகளை அரசுடைமையாக்க பிரதமருக்கு மனு | 'Vellore CMC and Loyola college should be nationalized' - Hindutva petition

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (13/09/2017)

கடைசி தொடர்பு:17:15 (13/09/2017)

’வேலூர் சி.எம்.சி., லயோலா கல்லூரிகளை அரசுடைமையாக்க பிரதமருக்கு மனு

வேலூர் சி.எம்.சி., சென்னை லயோலா கல்லூரி, மதுரை பாத்திமா கல்லூரி, மதரஸாக்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களை  அரசுடமையாக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித்தலைவர் சோலைக்கண்ணன் பிரதமர், தமிழக முதல்வர், மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார். 

இந்துமக்கள்கட்சி


இதுபற்றி அவரிடம் கேட்டபோது,  ''சிறுபான்மை அந்தஸ்து என்ற அடிப்படையில் அரசின் சலுகைகளை பெற்றுக்கொள்ளும் கிறிஸ்துவ, இஸ்லாமிய நிறுவனங்கள், அரசின் சட்டதிட்டங்களுக்கு எதிராகவும், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமலும் செயல்படுகிறது. சேவை என்ற பெயரில் மதமாற்றத்தைச் செய்துவரும் இந்நிறுவனங்கள், தற்போது நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்திவருகிறது. நக்சல், திராவிட இயக்கங்களின் கூடாரமாக விளங்கி அரசுக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டி தேச விரோத செயல்களில் ஈடுபடும் சென்னை லயோலா, மதுரை பாத்திமா கல்லூரி, வேலூர் சி.எம்.சி.யை அரசுடைமையாக்கவேண்டும்.

நீட் தேர்வுக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்துவரும் எஸ்.எப்.ஐ,கம்யூனிச, திராவிட, கிறிஸ்துவ, இஸ்லாமிய மாணவர் அமைப்புகளைத் தடை செய்யவேண்டும். தனியார் கல்லூரிகளின் கல்வி வியாபாரத்தை தடுக்க நீட் தேர்வு கண்டிப்பாக வேண்டும். தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் ஏற்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும். மும்மொழி பாடத்திட்டம் வேண்டும், கான்வென்ட் கலாசாரம் ஒழிக்கப்படவேண்டும், சாரணர், செஞ்சிலுவைச் சங்கம் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை தமிழக பள்ளிகளில் அனுமதிக்கக்கூடாது என்கிற கோரிக்கைகளை  வைத்துள்ளோம்'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க