Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெல்லையில் வேகமாகப் பரவும் டெங்குக் காய்ச்சல் - அச்சத்தில் பொதுமக்கள்!

டெங்கு ஒழிப்பு கூட்டம்

நெல்லை மாவட்டத்தில் மர்மக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. கிராமங்களை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவியது. மாவட்டம் முழுவதும் 10-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்த நிலையில், டெங்கு பாதிப்பில் இருந்து நூற்றுக்கணக்கானோர் அதிர்ஷ்டவசமாக மீண்டனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று டெங்கு பாதிப்பில் இருந்து பலர் மீண்ட நிலையில், தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

காய்ச்சல் தடுப்பு ஆலோசனை

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இந்தக் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. பள்ளியில் பயிலும் ஒரு மாணவனுக்கு டெங்கு பாதித்தால் அதன் மூலமாக அடுத்தவருக்கும் இந்தக் காய்ச்சல் பரவுவதால் பெற்றோர் தங்களுடைய குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவே அச்சப்படும் நிலைமை உள்ளது. களக்காடு, சுரண்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக களக்காடு அருகே உள்ள தெற்கு அப்பர்குளம் கிராமத்தில் 100-க்கும் அதிகமானோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் காய்ச்சலால் அவதிப்படும் நிலையில் மருத்துவமனைக்குச் செல்லக் கூட முடியாத நிலை இருப்பதாக அந்தக் கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், காய்ச்சல் பாதிப்பில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்லூரிகளின் முதல்வர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. சுகாதாரத்துறை இயக்குநர்கள், மருத்துவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பள்ளி மாணவ மாணவியருக்கு தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தால் உடனடியாக சிகிச்சை எடுக்க வலியுறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அத்துடன், டெங்கு மற்றும் சாதாரண வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம்

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ’காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது, இந்தக் குழுவினர், தொடர்ச்சியாக விடுப்பு எடுக்கும் மாணவர்களிடம் அதற்கான காரணத்தைக் கேட்டு அறிய வேண்டும். தொடர்ந்து பள்ளி, கல்லூரிக்கு வராத மாணவர்களின் வீட்டுக்கே சென்று அவர்களின் நிலைக்கு காய்ச்சல் காரணமா? என்பதைக் கண்டறிய வேண்டும். இதன்மூலமாக டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களைக் கட்டுப்படுத்த முடியும். இந்தக் குழுவினர் அர்ப்பணிப்புடன் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close