Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜாக்டோ- ஜியோ போராட்டமும் மினி பஸ்ஸும்.! அவதிப்பட்ட மக்கள்.!

தேனி மாவட்டத்தில் பாரஸ்ட் ரோடு, என்.ஆர்.டி நகர், பூதிப்புரம், பி.சி.பட்டி, முல்லை நகர், அம்மா பட்டி ஆகிய பகுதிகள் அதிக குடியிருப்புகள் மிகுந்த பகுதிகள். இப்பகுதிகளுக்கு அரசுப்பேருந்து வசதி செய்யப்பட வேண்டும் என்பது பல வருடக் கோரிக்கை. ஆனால், இன்று வரை அதற்கான எந்த முயற்சியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கவில்லை. இப்பகுதிகளில் குடியிருப்புகள் பெருகிக்கொண்டிருக்கும் சூழலில் அப்பகுதி மக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வது தனியார் மினி பஸ்கள்தான்.

தேனி நகரத்துக்குள் வர வேண்டும் என்றால் அவர்கள் முழுமையான மினி பஸ்களை மட்டுமே நம்பி இருக்கும் சூழலில், கடந்த இரண்டு நாள்களாக அவர்கள் பயணம் செய்யும் மினி பஸ்களை, ஜாக்டோ- ஜியோ போராட்டக்காரர்களை கைதுசெய்து ஏற்றிச்செல்ல மாவட்ட காவல்துறை பயன்படுத்தி வருகிறது. ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலையில் போராட வந்ததும், மினி பஸ்களையும் வரவழைத்துவிடுகிறது காவல்துறை. போராட்டம் காலையில் துவங்கி மதிய நேரமே அவர்களைக் கைதுசெய்யும் காவல்துறை, மினி பஸ்களை ஏன் காக்க வைக்க வேண்டும்? என்ற கேள்விக்கு முன்பாக, போராட்டக்காரர்களை ஏற்றிச்செல்வதற்கே உரித்தான வாகனங்கள் காவல்துறையிடம் இருக்கும்போது அவற்றை பயன்படுத்தாதது ஏன்? என்ற கேள்வி எழாமல் இல்லை.

அவை அனைத்தும் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பயனற்று நிறுத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு புறம் என்றால், போராட்டத்தில் பங்கேற்கும் பெரும்பாலான பெண்கள் தனியார் வாகனத்தில் ஏற்றிச்செல்வதைக் கண்டு கைதாகாமல் திரும்பிச் சென்றனர். இப்படி கைதுசெய்து அழைத்துச்செல்ல மினி பஸ்களை பயன்படுத்துவதால் பலர் போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்படுவது மாவட்ட காவல்துறைக்கு தெரியுமா? அல்லது சொந்த வண்டிக்கு டீசல் மிச்சம் என்று மெத்தனமாக இருக்கிறதா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close