Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’சமூக நீதியை அழிக்கும் புறவாசல் ஆயுதமாக நுழைந்த நீட்’: கனிமொழி தாக்கு!

’சமூக நீதியை அழிக்கும் புறவாசல் ஆயுதமாக நுழைந்துள்ளது நீட்’ என கனிமொழி எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். 

கனிமொழி

’நீட்’ தேர்வை எதிர்த்து அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார். அவர் பேசுகையில், “சமூக நீதியைப் போராடிப் பெற்றதில் தனிச்சிறப்பு வாய்ந்தது தமிழ்நாடு. ஏழை மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று நுழைவுத் தேர்வு முறையை ரத்துசெய்தார் கலைஞர். இன்று சமூக நீதியை அழிக்கும் புறவாசல் ஆயுதமாக 'நீட்' தேர்வு வந்துள்ளது. தனியார் நடத்தும் 'நீட்' பயிற்சி மையங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு நடந்துகொள்கிறது. இது தகுதித் தேர்வா அல்லது வசதியற்ற தாழ்த்தப்பட்ட மக்களை மருத்துவம் படிப்பதில் இருந்து வடிகட்டும் தேர்வா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் கூறுகையில், ”கிராமப்புறத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற கனவோடு உள்ள ஏழை மாணவனைப் பின்னுக்குத் தள்ளி, சிறப்பாக உள்ள தமிழக கிராமப்புற மருத்துவ வசதியைச் சீரழிக்கிறது 'நீட்'. தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள மத்திய அரசின் காலில் விழும் இன்றைய மாநில அரசுக்கு மக்கள் பிரச்னைகளைப் பற்றி யோசிக்க நேரமில்லை. இந்த ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டினால் தான் தமிழகத்துக்கு விடியல் பிறக்கும்’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close