Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வுக்கு எதிராக ஒன்றிணைந்த அரசியல் கட்சிகள் - திருப்பூரில் ஆர்ப்பாட்டம்..!

தமிழகம் முழுவதும் நீட் தேர்வு முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாள்தோறும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசியல் அமைப்புகள், கட்சிகள் ஆகியோர் ஒன்றுகூடி நீட் தேர்வு முறைக்கு எதிராக ஆங்காங்கே முழக்கங்கள் எழுப்பி வருகிறார்கள். உண்ணாவிரதம், சாலை மறியல், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என பல்வேறு வழிகளில் மத்திய மாநில அரசுகளுக்கு தங்களின் எதிர்ப்பையும், கண்டனங்களையும் பதிவு செய்துகொண்டே இருக்கிறார்கள்.

பா.ஜ.க நீங்கலாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வு முறைக்கு எதிராக ஒத்த கருத்தைக் கொண்டிருக்கும் வேளையில், இன்றைய தினம் நீட் தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இன்று நடைபெற்ற அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சியினரும் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

காலை முதல் மதியம் 12 மணிவரை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட்டு, தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close