நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை தடை செய்யவேண்டும்..! இந்து மக்கள் கட்சி கோரிக்கை

நீட் தேர்வுக்கு எதிராக சட்டவிரோதமாக பள்ளி மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி அவர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் உள்நோக்கத்துடன் செயல்படும் அமைப்புகளைத் தடை செய்யக்கேட்டும், தமிழகத்தில் நவோதய பள்ளிகளை உடனடியாக தொடங்கக்கோரியும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

நீட் தேர்வை தமிழகத்தில் அமல்படுத்துவதன் மூலம் மருத்துவக் கல்வி வியாபாரத்தைத் தடுக்க முடியும். ஏழை எளிய கிராமப்புற மக்கள் பயன்பெறும் விதமாக உடனே அமல்படுத்தப்பட வேண்டும். மேலும், மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தொடங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும். இதன்மூலம் மும்மொழி கல்வி திட்டம்,  மழலையர் கல்வி, தொடக்கக் கல்வி ஆகியவை முழுமையாக தாய்மொழிக் கல்வியாக இருக்கும், மத்திய அரசு பாடத் திட்டத்துக்கு நிகராக தமிழக கல்வித் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை இந்து மக்கள் கட்சியினர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவானிடம் அளித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!