Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஜக்கி வாசுதேவின் 'நதிகளை மீட்போம்' ஓர் ஏமாற்றுத் திட்டம்' - பெ.மணியரசன் எச்சரிக்கை

"க்கி வாசுதேவின் 'நதிகளை மீட்போம்' ஓர் ஏமாற்றுத் திட்டம். தமிழர்கள் ஏமாந்துபோகக்கூடாது. உழவர்கள் விழிப்புஉணர்வு அடைய வேண்டும். பா.ஜ.க-வின் சூழ்ச்சித் திட்டத்துக்குப் பலியாகிவிடக் கூடாது" என்று காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கூறியுள்ளார்.

நதிகளை மீட்போம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் செயல்படுத்தச் சொல்லி, தன் சொந்த மாநிலமான கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சருக்கு ஜக்கி வாசுதேவ் இதுவரை கோரிக்கை வைத்ததில்லை. கங்கை மற்றும் யமுனையைக் காப்பதற்கான வேலைத் திட்டம்தான் தற்போது அவர் செய்துவருவது. காவிரி உரிமையை இழந்து நாம் தவித்துவருகிறோம். உரிமையை மீட்க பல போராட்டங்களைச் செய்துவருகிறோம். அதைத் திசை திருப்புவதற்காக, 'காவிரியை மற, கங்கையை நினை' என்பது மத்திய அரசின் ஒரு சூழ்ச்சித் திட்டம். அதன் மற்றொரு வடிவம்தான் சத்குருவின் 'நதிகளை மீட்போம்' 'பாரதம் காப்போம்' என்பதும். 

மேலும், மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லி அவர்கள் கொடுத்திருக்கும் அலைபேசி எண்ணானது, பாரதிய ஜனதா உறுப்பினர் சேர்க்கைக்கு மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லிய அதே எண்தான். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இதை ஆதரிப்பது கண்டனத்துக்குரியது. காவிரியை மறக்கடிக்கும் வேலையை கூட்டாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். மேலும், அதற்கான விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டிருக்கிறார். நதிகள் இணைப்புக்கு மத்திய அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று பேசியிருக்கிறார். அதேசமயம், காவிரிப் பிரச்னையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காக்கிறார். அதுமட்டுமல்லாமல், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டவும் ஒப்புதல் அளித்திருக்கிறார் முதல்வர்.

பெ.மணியரசன்

மத்திய அரசு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஜக்கி வாசுதேவ் மூலமாக தமிழ்நாட்டுக்கு எதிராக ஒரு சூழ்ச்சியைச் செய்துவருகிறது. எனவே, தமிழர்கள் ஏமாந்துவிடக்கூடாது. விழிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும் " என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close