Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீட்டு வேலைக்காக ரூ.10 ஆயிரத்துக்கு ஐ.டி தம்பதியரால் வாங்கப்பட்ட சிறுமி மீட்பு!

ஹைதராபாத்தில், ஐ.டி துறையில் பணியாற்றும் தம்பதியர், 10 வயது சிறுமியை ரூ.10 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கி, வீட்டு வேலையில் அமர்த்தி அடிமையாக நடத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து அந்தச் சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி

ரகுராம் மற்றும் சங்கீதா இருவரும் ஐ.டி துறையில் பணிபுரிகிறார்கள். இவர்கள், தங்களின் வீட்டு வேலைக்காக மகாராஷ்டிராவிலிருந்து 10 வயது சிறுமியை ரூ.10 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளனர். அந்தச் சிறுமியை அடிமையாக நடத்தி வேலை வாங்கியுள்ளனர். ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு மட்டுமே வழங்கியதோடு, அவ்வப்போது அடித்துத் துவைத்துமிருக்கின்றனர். தெருவில் போய்க்கொண்டிருந்த ஒருவரிடம், பால்கனியிலிருந்து பேசியதற்காகக் கட்டிவைத்து தண்டனை வழங்கியுள்ளனர். 

இதையெல்லாம் அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் போலீஸில் தெரிவித்திருக்கிறார். அவர்களிடமிருந்து அந்தச் சிறுமி மீட்கப்பட்டுள்ளார். ஆனால், அந்தச் சிறுமியை மருத்துவ சிகிச்சைக்காக ஒரு வாரம் முன்புதான் அழைத்துவந்தோம் என்று தம்பதியர் விசாரணையில் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close