Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திறந்தவெளியைப் பயன்படுத்தியதற்காக வேலைநீக்கம் பெற்ற ஆசிரியர்!

மத்தியப்பிரதேச மாநிலத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் திறந்தவெளியில் மலம் கழித்ததற்காக, வேலையிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், திறந்தவெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திறந்தவெளியைப் பயன்படுத்துபவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பு, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

திறந்தவெளி

இந்நிலையில், ஓர் ஆசிரியரே திறந்தவெளியைப் பயன்படுத்தியதைத் தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் கண்டதால், அந்த ஆசிரியரை அசோக்நகர் மாவட்டக் கல்வி ஆணையர் வேலையிலிருந்து நீக்கம் செய்துள்ளார்.

மேலும், ஜூன் மாதத்தில் மத்தியப்பிரதேசத்தின் விர்புர் கிராமத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திறந்தவெளியைப் பயன்படுத்தியதற்காக 13 குடும்பங்களிடமிருந்து ரூ. 4 லட்சம் அபராதமாகப் பெறப்பட்டிருக்கிறது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close