Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஆனார் ஹலீமா யாகோப்

halimah yacob, ஹலீமா யாகோப்

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஹலீமா யாகோப். சிங்கப்பூரின் 8-வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். சிங்கப்பூரின் அதிபராக பதவி வகித்துவந்த டோனி டான் கெங் யாமின் பதவிக்காலம், கடந்த மாதம் 31-ம் தேதி முடிந்தது. அங்கு, அதிபரின் பதவிக்காலம் 6 வருடங்கள். இந்தத் தேர்தலில், மலாய் இனத்தைச் சேர்ந்தவர்களே போட்டியிடலாம் எனக் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 23-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று (13-ம் தேதி) வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரும், ஆளும் மக்கள் செயல்பாட்டுக் கட்சி உறுப்பினருமான ஹலீமா யாகோப் உட்பட  ஐந்து பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில், மற்ற நான்கு பேரின் வேட்புமனுக்களும் முழுத் தகுதி பெறாததால், மலாய் இனத்தைச் சேர்ந்த ஹலீமா யாகோப் போட்டியின்றி புதிய அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதை, அந்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சிங்கப்பூரின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹலீமா யாகோபிற்கு, 63 வயதாகிறது. இன்று மாலை 6 மணிக்கு இஸ்தானாவில் நடைபெறும் நிகழ்ச்சியில், நாட்டின் 8-வது அதிபராக ஹலீமாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close