ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தில் தலையிட்ட ஐ.நா பொதுச் செயலாளர்!

rohingya muslims, ரோஹிங்கியா முஸ்லிம்கள்

மியான்மரில், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைகளுக்கு, உலகம் முழுவதும் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. இந்நிலையில், ஐ.நா தலைமையகத்தில் மியான்மர் விவகாரம் பற்றிப் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது தொடுக்கப்பட்டுவரும் வன்முறை வெறியாட்டங்களை, மியான்மர் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உலகின் பல்வேறு தலைவர்கள் இந்தக் கோரிக்கையை வைத்தும், மியான்மர் அரசு செவிசாய்க்க மறுக்கிறது. நேற்று முன்தினம், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல்குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில், ஐ.நா பொதுச் செயலாளரே இந்த விவகாரம் பற்றிப் பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

ஆன்டனியோ குட்டரெஸ் பேசியபோது, “மியான்மர் அரசு மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். தொடரும் வன்முறைகளுக்கு முடிவு கட்டி, அங்கு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். சொந்த நாட்டை விட்டு வெளியேறிய அனைவரும், நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மியான்மர் அரசிடம் கோருகிறேன். அப்பாவி பொதுமக்கள் மீதான இந்த வன்முறை நடவடிக்கைகளை எப்போதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!