Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பச்சைமிளகாய் விலை சரிவு... பயிரிட்ட விவசாயிகள் கவலை!

நெல்லை மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக மிளகாய் விலை குறைந்துவருவதால், அவற்றை விளைவித்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

மிளகாய்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம், மானூர், களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு போதிய மழை இல்லாத நிலையிலும் கடுமையான வறட்சியையும் சமாளிக்கும் வகையில் விலைகொடுத்து தண்ணீரை வாங்கிப் பாய்ச்சிய விவசாயிகள், பயிரைக் காப்பாற்றினார்கள். பின்னர், அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக, விளைச்சல் அமோகமாக இருந்தது. 

இதையடுத்து, பாவூர்சத்திரத்தில் உள்ள தினசரிச் சந்தைக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் மிளகாய் வரத்து இருந்தது. குறிப்பாக, ஆலங்குளம், மேலப்பாவூர், குறும்பலாப்பேரி, நாகல்குளம், சோலைச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிக அளவில் வரத்து இருந்தது. கடந்த வாரத்தில், 5 முதல் 10 டன் வரை மட்டுமே பாவூர்சத்திரம் சந்தைக்குப் பச்சைமிளகாய் மூட்டைகள் வந்தன. இதனால், கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை தரத்துக்கு ஏற்ப விற்பனையானது.

கடும் சிரமத்துக்கு இடையே விளைவிக்கப்பட்ட பச்சைமிளகாய்க்கு நல்ல விலை கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், கடந்த இரு தினங்களாக பச்சைமிளகாய் வரத்து அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. உள்ளூரிலிருந்து மட்டும் அல்லாமல், ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் தரமான மிளகாய் விற்பனைக்கு வந்து குவியத் தொடங்கியிருக்கிறது. 

பாவூர்சத்திரம் சந்தைக்கு தினமும் 40 டன் முதல் 50 டன் வரை மிளகாய் வரத்து இருக்கிறது. இதனால், விலை வீழ்ச்சியடையத் தொடங்கியது. கடந்த வாரத்தில், கிலோவுக்கு 80 ரூபாயாக இருந்தநிலையில், தற்போது கிலோ 15 ரூபாய் முதல் 20 ரூபாய் அளவுக்கே விற்பனையாகிறது. இதனால், பயிரிட்ட செலவைக் கூட எடுக்க முடியாத கவலை விவசாயிகளை வாட்டத் தொடங்கியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close