Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி!' - வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகம்

இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ்களைப் பொறுத்தவரை நாம் அனைவரும் அதிகமாகப் பயன்படுத்துவது வாட்ஸ்அப்தான். சமீப காலமாக வாட்ஸ்அப் மேம்படுத்தப்பட்டு பல புதிய வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இன்னும் பல புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் அளிக்கும் முயற்சியில் இருக்கிறது. அதில் முக்கியமானது அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி. தற்பொழுது வாட்ஸ்அப்பை பொறுத்தவரையில் நாம் மற்றவர்களுக்கோ அல்லது வாட்ஸ்அப் குரூப்களிலோ ஒரு மெசேஜை தவறாக அனுப்பிவிட்டால் அதை அழிக்க முடியாது. ஆனால் ஏற்கெனவே இதுபோன்ற வசதி டெலிகிராம், வைபர் போன்ற பிற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ்களில் இருக்கிறது. எனவே வாட்ஸ்அப்பிலும் இது போல் deleteன்ற வசதியை அந்த நிறுவனம் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. பரிசோதனை முயற்சியில் இருக்கும் இந்த வசதியைப் பற்றி தற்பொழுது தகவல்கள் வெளியாகியிருகின்றன. மிக விரைவில் இந்த வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தபட உள்ளது. இந்த வசதி மூலமாக அனுப்பிய மெசேஜ்களை எதிரில் இருப்பவர் படிப்பதற்கு முன்பாக அழித்து விட முடியும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement