Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயர் நீதிமன்றத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் முறையீடு!

’பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும்’ எனக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

உயர் நீதிமன்றம்

அ.தி.மு.க.-வில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை அடைந்ததால், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை' என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள் கடந்த மாதம் 22-ம் தேதியும், மேலும் மூன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் செப்டம்பர் 6-ம் தேதியும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்துத் தனித்தனியே கடிதம் கொடுத்தனர்.

தி.மு.க மற்றும் அதன் தோழமைக்கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் 26.8.2017 அன்று ஆளுநரிடம், தமிழக அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என்றும், சட்டசபையைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மனு கொடுத்தனர். தவிர, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் டெல்லியில் காங்கிரஸ், தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து, தமிழகத்தில் எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது என்று மனு கொடுத்தனர். இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 10 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவைக் கடந்த 10-ம் தேதி அன்று சந்தித்து மனுகொடுத்தனர்.

தற்போது ஸ்டாலினைத் தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ’எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இதுவரையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடாததையொட்டி தினகரன் அணியினர் மனு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று இம்மனு மீதான விசாரணையில், “தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து பேரவைத் தலைவரிடம் கேட்டு இன்று மாலைக்குள் சொல்ல வேண்டும்” என அரசுத் தலைமை வழக்கறிஞரிடம் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement