Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எப்போது தூர் வாரப்படும் சோத்துப்பாறை அணை?

பெரியகுளத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, சோத்துப்பாறை அணை. 2001-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் மொத்தக் கொள்ளளவு, 126.28 அடி. கிட்டத்தட்ட  2500 ஏக்கருக்கு மேல் பாசனப் பரப்பளவு, இந்த அணையை மட்டுமே நம்பியிருக்கிறது. மேலும், பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், லெட்சுமிபுரம் என சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் முக்கிய ஆதாரம் சோத்துப்பாறை அணைதான். இவ்வளவு சிறப்புகளைக்கொண்ட சோத்துப்பாறை அணை, நேற்றிரவு தனது மொத்த கொள்ளளவையும் எட்டியது.

அணை கட்டப்பட்டு சுமார் 16 ஆண்டுகள் ஆனபோதும், இப்போது வரை அணையைத் தூர் வார எந்த நடவடிக்கையிலும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது இல்லை. இந்தப் பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, ``அணையில் அதிகமாக மணலும் சகதியும் இருக்கிறது. இதனால், மூன்று நாள்கள் மழை பெய்தாலே, அணை நிரம்பி மாறுகால் பாய்ந்து தண்ணீர் வீணாகிறது. மேலும், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி அளவில் சிறியதாக இருப்பதாலும் வேகமாக அணை நிரம்பிவிடுகிறது. அணையில் இருக்கும் மணலை உடனே அள்ளி, தூர் வார வேண்டும், நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் பொதுப்பணித்துறையினரிடம் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை`` என்றனர்.

மழை இல்லாத காலத்தில் அணையைத் தூர் வாரியிருந்தால், இந்நேரம் தேவைக்கு அதிகமான தண்ணீரை அணைகளில் தேக்கியிருக்க முடியும். அதைத் தண்ணீர் இல்லாத காலங்களில் பயன்படுத்த முடியும் என்பதை அறிந்தும் அறியாததுபோல, மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறையும் மெளனம் காப்பது ஏனோ!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close