Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நொய்யலில் கழிவுநீர் கலக்கிய சாய ஆலைகளுக்கு சீல்! மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் அருகே அமைந்துள்ளது மாணிக்காபுரம் குளம். சமீபத்தில் திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால், பல ஆண்டுகள் கழித்து தற்போதுதான் இந்த குளத்துக்கு நொய்யலில் இருந்து தண்ணீர் செல்லும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்நிலையில், கடந்த வாரம் நொய்யலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, திருப்பூரில் செயல்பட்டு வரும் சாய ஆலைகள், பொது சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுநீரை, நொய்யலில் திறந்துவிட்டதாக புகார் எழுந்தது. விவசாயிகளும், பல்வேறு சமூக நல அமைப்புகளும் இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களும் அளித்து வந்தனர்.

அதன்பிறகு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குற்றச்சாட்டு எழுந்த தனியார் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வுகள் செய்து, சுத்திகரிப்பு செய்யப்படாத சாயக் கழிவுநீரை திறந்துவிட்டது தொடர்பாக விளக்கம் கோரி ஆலை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். பின்னர் இந்த பிரச்னை தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமைக்கு அறிக்கையும் சமர்ப்பித்தனர் மாவட்ட அதிகாரிகள்.

அதன்பிறகு சம்பந்தப்பட்ட தனியார் பொது சுத்திகரிப்பு நிலையத்தின்மீதும், அதன் உறுப்பினர்களாக இருக்கும் சாய ஆலைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமையகம், திருப்பூர் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட தனியார் பொது சுத்திகரிப்பு நிலையத்துக்கும், அதன் உறுப்பினர்களான 23 சாய ஆலைகளுக்கும் ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள், உடனடியாக ஆலைகளின் பணிகளை நிறுத்துமாறு அதன் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் பொது சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சாய ஆலைகளுக்கு சீல் வைத்த மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், மறு உத்தரவு கிடைக்கும்வரை சீல் வைக்கப்பட்ட பொது சுத்திகரிப்பு நிலையமும், சாய ஆலைகளும் செயல்படக்கூடாது என்று அறிவித்திருக்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close