Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகளைக் கொன்ற குற்றவாளிக்கு குண்டர் சட்டம் ரத்து: தந்தை கடும் எதிர்ப்பு

சிறுமி ஹாசினியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த வழக்கில் கைதான இளைஞருக்கு ஜாமீன் வழங்கியதற்கு பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

hasini

 

சென்னை, முகலிவாக்கத்தில், கடந்த பிப்ரவரி 5-ல் சிறுமி ஹாசினி பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. பாபு என்பவரது 6 வயது மகள் ஹாசினி, கடந்த பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானர். இதுகுறித்து ஹாசினியின் தந்தை பாபு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். சிறுமி ஹாசினி வசித்து வந்த அதே குடியிருப்பைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். தஷ்வந்த் ஹாசினியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.



இந்நிலையில், தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்தின் தந்தை ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், தஷ்வந்த் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்துசெய்து உத்தரவு பிறப்பித்தனர். சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றவாளி மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு ஹாசினியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ’பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி மீதான குண்டர் சட்டத்தை ரத்துசெய்வதால் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு பயமில்லாமல் போய்விடும். மீண்டும் மீண்டும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியாகத் தொந்தரவளிப்பார்கள்’ என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close