Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டும்..! ஜாக்டோ- ஜியோ விளக்கம்

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்குப் போதிய அவகாசம் அளிக்க வேண்டும் என்று ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 


ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கடந்த ஒரு வார காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தொடர்ச்சியாக ஒரு வார காலமாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதால் பள்ளிக் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துவருகிறது. இந்த நிலையில், ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், 'ஜாக்டோ- ஜியோ ஊழியர்களின் போராட்டத்தால் 10 சதவிகித ஊழியர்கள் மட்டுமே பணிக்குச் செல்லவில்லை. ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசுக்கு போராட்டக்காரர்கள் அவகாசம் அளிக்க வேண்டும். தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை அவர்கள் பொறுமை காக்க வேண்டும். நவம்பர் மாத இறுதிக்குள் நல்ல முடிவு எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்' என்று தெரிவித்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement