Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வருக்கு எதிராகக் கடிதம் கொடுத்தது ஏன்? - சபாநாயகரிடம் ஜக்கையன் விளக்கம்

தினகரன் அணியிலிருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறிய கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் இன்று தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபாலைச் சந்தித்தார். அப்போது, 'எனக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகத்தான் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தேன்' என்று தெரிவித்துள்ளார். 

ஜக்கையன்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க இரண்டு அணிகளாக பிரிந்தது. பின்னர், பன்னீர்செல்வம், பழனிசாமி அணியினர் இணைந்தனர். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் போர்க்கொடி தூக்கினர். குறிப்பாக, பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அவர்கள் ஆளுநரைச் சந்தித்துக் கடிதம் வழங்கினர். இதைத்தொடர்ந்து, மேலும் சில எம்.எல்.ஏ-க்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே, பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் பழனிசாமியைச் சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தினகரன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து வலியுறுத்தினர். இதற்காக, புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருந்த எம்.எல்.ஏ-க்கள் சென்னை வந்தனர். அப்போது, தினகரன் அணியில் இருந்த கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் திடீரென்று எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறினார். மேலும் சபாநாயகர் தனபாலைச் சந்தித்த ஜக்கையன், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலைச் சந்தித்த ஜக்கையன்,  'அழுத்தம் காரணமாகவே முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்தேன்' என்று விளக்கம் அளித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close