Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொதுக் கழிப்பிடம் இல்லாத ஊருக்குள் டாஸ்மாக் கடை!


''எங்க ஊருக்குள் டாஸ்மாக் கடை வந்தால் பெண்கள் எல்லோரும் தற்கொலை செய்து இறந்து விடுவோம். பொதுக் கழிப்பிடம் கட்டித் தர இந்த அரசாங்கத்துக்குத் துப்பில்லை. டாஸ்மாக் கடையைக் கொண்டு வர்றாங்கலாம். யாருடைய மானத்தை காவு வாங்க இந்தக் கடையை அரசாங்கம் கொண்டு வருகிறது. ஒண்ணு நாங்க இருக்கணும் இல்ல. அந்த டாஸ்மாக் கடை இருக்கணும்'' எனக் குமுறுகிறார்கள் ஓமலூர் தாலுகா சொரையான்காடு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள்.

இதுபற்றி சோரையான்காடு பகுதியைச் சேர்ந்த சேகர், ''ஏற்கெனவே எங்க கிராமத்துக்கு அருகே தேக்கம்பட்டி, வெள்ளாளப்பட்டிப் பகுதியில் டாஸ்மாக் கடைகள் இருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, இரண்டு கடைகளும் எடுத்துவிட்டார்கள். அதன்பிறகு நீதிமன்றம் அதே இடங்களில் டாஸ்மாக் கடைகள் வைத்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்ட பிறகு, தேக்கம்பட்டியில் கடை வைத்துவிட்டார்கள். வெள்ளாளப்பட்டியில் கடை வைக்கும்போது அங்கிருக்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்தப் பகுதியில் கடை வைக்கவில்லை.


அந்தக் கடையை எங்கள் ஊரான சோரையான்காடு பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வைக்கப் போகிறார்கள். ஏற்கெனவே வெள்ளாளப்பட்டியில் கடை இருந்ததே பள்ளிக் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் இருந்தது. தற்போது கரட்டுப் பகுதியில் இந்த டாஸ்மாக் கடை வர இருக்கிறது. இந்த வழியாகத்தான் வயது வந்த பெண் பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்கிறது. அதனால் பள்ளிக் குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும்'' என்றார்.

 

 

 

இதுபற்றி சோரையான்காடு பகுதியைச் சேர்ந்த மதேஸ்வரி, ''எங்க ஊரில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கிறது. பொதுக் கழிப்பிட வசதி இல்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் கரட்டு பக்கமாகத்தான் கக்கூஸ் போயிட்டு வருவோம். தற்போது இந்த இடத்தில்  டாஸ்மாக் கடையைக் கொண்டு வருகிறார்களாம். ஊருக்கு பொதுக்கழிப்பிடம் இல்லை. ஆனால், டாஸ்மாக் கொண்டு வருவாங்களாம். நாங்க கக்கூஸ் போற இடத்தில் டாஸ்மாக் கடை வந்தால் பெண்களின் நிலை என்னவாக இருக்கும். இதையெல்லாம் வெளியில் சொல்லுவதற்கே வெட்கமாகவும் கேவலமாகவும் இருக்கிறது. ஆனால், யார் மானத்தை கெடுப்பதற்கு இங்கு கடையைக் கொண்டு வருகிறார்கள். இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை வந்தால் ஊரில் உள்ள எல்லாப் பெண்களும் தற்கொலை செய்துகொள்வோம். ஒண்ணு இந்த ஊரில் நாங்கள் இருக்க வேண்டும். இல்லையேல் டாஸ்மாக் இருக்க வேண்டும். என் உயிரைக் கொடுத்தாவது இந்தப் பகுதியில் டாஸ்மாக் வராமல் செய்வேன்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close