குழந்தைகள் பாதுகாப்புக்காக ’பாரத யாத்திரை’ மதுரை வந்தது!

குழந்தைகள் நலனுக்காகப் பாடுபடும் நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய பாரத யாத்திரை இன்று மதுரை வந்தது. 
நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள், குழந்தை கடத்தல்கள் போன்றவற்றைத் தடுக்கவும், குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பொதுமக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், குமரி முதல் டெல்லி வரை பாரத் யாத்திரையைக் கடந்த திங்கள்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த யாத்திரை 22 மாநிலங்கள் வழியாக 11 ஆயிரம் கிலோ மீட்டர் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 16-ம் தேதி டெல்லியில் நிறைவு பெறவுள்ள இந்த யாத்திரையின் ஒரு குழுவினர் இன்று மதுரைக்கு வந்தனர்.

பாரத்யாத்திரை

நாட்டில் 6 நிமிடத்துக்கு ஒரு குழந்தை விகிதம் வருடத்துக்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போவதாகப் புள்ளி விவரம் கூறுகிறது. தமிழகத்தில் 10 சதவிகித குழந்தைகள் வன்முறைக்கு ஆளாவதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இனி இதுபோன்ற கொடுமைகளைத் தடுக்க வேண்டும் என்பதே  இந்த யாத்திரையின் நோக்கம் என்றனர். மதுரை தெப்பக்குளத்தில் யாத்திரை வந்தவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் வீரராகவராவ், கல்லூரி, பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் 'குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளைக் காப்போம்' என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த யாத்திரை, அடுத்து சேலம் வழியாகச் செல்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!