Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொலைகாரனுக்கு தண்டனை கொடுக்காம, கோர்ட் எங்களை தண்டிச்சிடுச்சு... கலங்கும் ஹாசினியின் தந்தை

போரூரைச் சேர்ந்த பாபுவிடம் இருந்து, பத்திரிகையாளர் சந்திப்புக்கான தகவல் ஒன்று வாட்ஸ்அப்பில் வந்தது. பாபு..? கடந்த பிப்ரவரி மாதம் 5-ம் தேதி போரூரில் தஷ்வந்த் என்ற இளைஞரால் வன்புணர்வு செய்து எரிக்கப்பட்ட ஆறு வயதுக் குழந்தை ஹாசினியின் தந்தை. தன் மகளை வன்புணர்வு செய்த குற்றவாளி தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பதையடுத்து, தன் மகளுக்கான நீதியைத் தேடி பத்திரிகையாளர்களைத் தொடர்புகொள்ள பத்திரிகையாளர் மன்றத்துக்கு வருவதாகச் சொல்லியிருந்தார். 

ஹாசினி


பாபு குறிப்பிட்டிருந்த நேரத்தில் நாம் பிரஸ் கிளப்பில் இருந்தோம். ஆனால், பாபு வாசலிலேயே நின்று பரிதவித்துக்கொண்டிருந்தார். வார்த்தைகள் கைவிட கண்கள் கலங்கி நின்று கொண்டிருந்தவரை ஆறுதல் சொல்லி அழைத்து வந்தார் லஷ்மி ராமகிருஷ்ணன். 

“ஆறு வயசுதான் ஹாசினிக்கு. துறுதுறுன்னு ரொம்ப சுட்டியா இருப்பா. மூணாவது படிக்குற குழந்தைக்கு குட் டச், பேட் டச்னா என்னன்னு தெரியாது. எப்பவும்போல சந்தோஷமாதான் வீட்டுக்கு வெளியில விளையாடிட்டு இருந்தா. திடீர்ணு குழந்தையைக் காணோம். துடிதுடிச்சுப் போய் போலீஸ்ல புகார் கொடுத்தோம். ஆனா, பாவி அவளை துன்புறுத்தி எரிச்சுக் கொன்னுட்டான். அவன் ஒரு கொலைகாரன். அவனுக்கு இப்போ குண்டர் சட்டத்தை கோர்ட்டு ரத்து பண்ணியிருக்கு. இது எங்க வேதனையையும் கண்ணீரையும் இன்னும் கூட்டியிருக்கு. 

பாபுமகளைப் பறிகொடுத்த துக்கத்துல இருந்து என் மனைவி இன்னும்கூட மீண்டு வரல. எப்படியாவது கொலைகாரனுக்கு தண்டனை கிடைச்சிடும்னு நினைச்சோம். ஆனா, கோர்ட் தப்பு பண்ணினவனுக்கு தண்டனை கொடுக்காம, எங்களை தண்டிச்சிடுச்சு. அதுமட்டுமில்ல, அந்தக் குற்றவாளியோட அப்பா என்கிட்ட, 'என் மகனை எப்படியும் வெளியில கொண்டு வந்துடுவேன்'னு சவால் விடுறாரு. 

நான் இன்னைக்கு உங்க முன்னாடி என் பொண்ணுக்கு நியாயம் கேட்டு உட்காரல. ஆனா, நேத்து அவளுக்கு நடந்தது நாளைக்கு வேற எந்தக் குழந்தைக்கும் நடந்துடக்கூடாதுன்னு நினைக்குறேன். தண்டனை இல்லாம குற்றவாளி வெளியில வந்துட்டான்னா, அவன் செஞ்ச தப்பையும் உணரமாட்டான், இனி தப்பு செய்யவும் தயங்கமாட்டான். அந்தக் குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை கொடுக்கணும்'' - அந்தத் தகப்பனின் குரலில் அடர்ந்திருந்த துயரத்துக்கு முன் அரங்கம் மௌனித்து இருந்தது. 

லஷ்மி ராமகிருஷ்ணன், ''தினம் தினம் எத்தனை எத்தனையோ பெண் குழந்தைகள் கடத்தப்படுவதும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனாலும், நாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இந்தக் குற்றவாளி வெளியே வந்து நம் வசிப்பிடத்திலேயே வசிக்கலாம். நம் வீட்டிலுள்ள குழந்தைகள் மீதுகூட கை வைக்கலாம். நாம்தான் யோசிக்க வேண்டும். 

லக்ஷ்மி 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியின்போது தினமும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தொடர்பான கேஸ்கள் வந்துகொண்டே இருக்கும். இதற்கெல்லாம் தீர்வு என்னவென்று நாம் சிந்திக்க வேண்டும். நேற்று ஹாசினிக்கு நடந்தது இனி எந்தக் குழந்தைக்கும் நடக்கக்கூடாது. குற்றவாளி தஷ்வந்த்துக்கு கோர்ட் கொடுத்திருக்கும் பெயிலை உடனே தடை செய்வதோடு அவனைத் தண்டித்து ஹாசினியின் பெற்றொருக்கு மட்டுமல்லாமல், நம் எல்லோருக்கும் நிம்மதியைக் கொடுக்கும் கடமை நீதிமன்றத்துக்கு இருக்கிறது” என்றார் ஆவேசமாக. 

ஒரு குற்றவாளிக்கான தண்டனை என்பது, அதைப்போன்றதொரு குற்றச் சம்பவம் செய்ய நினைப்பவர்களுக்கான எச்சரிக்கையும்கூட. 'நாளைக்கு ஒரு தப்பு செய்ய நினைக்கிறவன்கூட, 'அதெல்லாம் கேஸ் நடத்தி வெளிய வந்துடலாம்'னு நினைக்க மாட்டானா? இந்தக் கோர்ட் குற்றவாளிக்குத் தண்டனை கொடுக்கல; மகளைப் பறிகொடுத்த பெத்தவங்களைதான் இந்தத் தீர்ப்பால மறுபடியும் மனசால துன்புறுத்தியிருக்கு' என பெற்றோர்களின் ஆற்றாமைக் குரல்கள் இந்தத் தீர்ப்பையடுத்து எதிரொலிக்கத் தொடங்கியிருக்கின்றன. 

கொடூரமாக தன் உயிர் பறிக்கப்பட்ட ஹாசினி செய்த தவறு என்ன?! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close