Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெல்லையில் மினி மாரத்தான் போட்டி.. கல்லூரி மாணவ மாணவிகள் 1,000 பேர் பங்கேற்பு!

நெல்லையில் எய்ட்ஸ் விழிப்பு உணர்வை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 1,000 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

மினி மாரத்தான்

சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சார்பாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இந்தப் போட்டியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். 5 கி.மீ தூரம் கொண்ட இந்தப் போட்டியில் கல்லூரி மாணவ மாணவிகள் 1,000 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். எய்ட்ஸ் விழிப்பு உணர்வை வலியுறுத்தியும் ரத்த தானத்தின் அவசியத்தைப் பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலும் இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமார், அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ரேவதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் வீரபத்ரன், உள்ளிட்ட அதிகாரிகளும் கல்லூரிப் பேராசிரியர்களும் கலந்துகொண்டனர். போட்டியைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ’சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. ரத்த தானம், எய்ட்ஸ் விழிப்பு உணர்வு ஆகியவற்றுக்காக நடத்தப்படும் இந்த மினி மாரத்தான் போட்டியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார். 

மினி மாரத்தான் ஓட்டம்

அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் மாநகர ஆணையர் குடியிருப்பு, டி.ஐ.ஜி குடியிருப்பு வழியாக திருச்செந்தூர் சாலையில் சென்று மீண்டும் தொடங்கிய இடத்தையே வந்தடைந்தது. 5 கி.மீ தூரம் கொண்ட இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டன. 10 இடங்களுக்குள் வந்தவர்களுக்கு தகுதிச் சான்றிதழும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close