Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷ்கோடி கடற்கரை இயற்கை மணல் குன்றுகளைப் பாதுகாக்க ஆய்வு!

தனுஷ்கோடி கடற்கரை மணற் குன்றுகளைப் பாதுகாப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சுற்றுச்சூழலியல் பேராசிரியர்கள் குழு கள ஆய்வை மேற்கொண்டது.

தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனைப் பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி சுற்றிப் பார்க்கச் செல்ல ஏதுவாக தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சாலையைக் கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் சாலையின் இரு புறங்களிலும் சுமார் 2 கி.மீ தூரத்துக்குத் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. 

தனுஷ்கோடி மணல் குன்றுகள் ஆய்வு

இந்நிலையில் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனைப் பகுதிகளில் இயற்கையாக உள்ள மணல் குன்றுகளை அதன் தன்மை மாறாமல் பராமரிக்கும் வகையிலும், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை மேம்படுத்திடும் வகையிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முனைவர் நடராஜன் இன்று தனுஷ்கோடிக்குச் சென்று பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியருடன் பாண்டிச்சேரி பல்கலைக்கழக சுற்றுச்சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் தேவிபிரசாத் தலைமையில் பேராசிரியர்கள் பொய்யாமொழி, யோகமூர்த்தி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இதனடிப்படையில் இப்பகுதியில் இயற்கையாக வளரக்கூடிய பனைமரம், ஈச்சைமரம், தாழை போன்ற மரக் கன்றுகளை நடவும், படரும் செடி, கொடிகளை வளர்த்திடவும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக சுற்றுச்சூழலியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விரிவான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை அளிப்பதன் அடிப்படையில் வனத்துறையினருடன் இணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் பேபி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) உமாமகேஷ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close