உடலுறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்- மதுரை கலெக்டர் பேச்சு 

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு இராசாசி மருத்துவமனை இணைந்து நடத்திய உடல் உறுப்பு தான வார விழிப்புஉணர்வு பேரணியை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கிவைத்து கலந்து கொண்டார். இதில் பேசிய கலெக்டர், ''மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் மூலம் பல்வேறு உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகள் மிக வெற்றிகரமாக செய்துவரப்படுகின்றன. மேலும், மதுரை மாவட்டத்தில் 2008-ம் ஆண்டு தொடங்கி 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை 1015 நபர்கள்தான் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். மக்களிடம் உறுப்பு தானம் குறித்த விழிப்புஉணர்வு மிகக் குறைவாக உள்ளது. இந்த 1015 நபர்களில் நானும் ஒருவன். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புஉணர்வு மக்கள் மத்தியில் பரவலாகச் செல்ல வேண்டும்'' என்றார்.  

வீரராகவராவ்

உடல் உறுப்பு தான விழிப்புஉணர்வு பேரணி அரசு மருத்துவக்கல்லூரியில் தொடங்கி அண்ணா பேருந்து நிலையம் வழியாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனை சென்றடைந்தது. பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி நடந்த கட்டுரை, பேச்சு, ஓவியம், கவிதை எழுதும் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!