Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“எதையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார்” - சொல்கிறார் நிர்மலா சீதாராமன்

nirmala sitharaman, நிர்மலா சீதாராமன்

ராணுவ அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார் நிர்மலா சீதாராமன். இந்தியாவின் மிக முக்கியமான இந்தப் பதவியில் இந்திரா காந்திக்குப் பின்னர் செயலாற்றும் பெண்மணி, தமிழகத்தின் நிர்மலா சீதாராமன்தான். இவர், இந்தப் பதவிக்கு வந்ததுமுதல், ராணுவத்தின் பல்வேறு தளங்களில் கவனம் செலுத்திவருகிறார். “தினமும் காலையில் முப்படைத் தளபதிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துவார். மேலும், இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்ப நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்”, என தொடக்கத்திலேயே அறிவித்தது பாதுகாப்புத் துறை அமைச்சகம்.

இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் உள்ள மகரபுரா ராணுவ விமான தளத்தை நிர்மலா சீதாராமன் நேற்று பார்வையிட்டார். அப்போது, ஏர் மார்ஷல் சின்ஹா மற்றும் ஏர் கமாண்டர் எச்.ஏ.ரத்தோர் உடனிருந்தனர். அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அமைச்சர், “இந்திய நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துவருகிறது. பாதுகாப்பில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்திவருகிறோம். ராணுவத்தில் பெண்கள் பங்களிப்பதால், நாட்டின் பலம் மேலும் அதிகரிக்கும்” என்றார். உ.பி-யில் நடந்த நிகழ்ச்சியின்போது பேசிய அவர், “இந்திய எல்லைகள் பாதுகாப்புடன் இருக்கின்றன, எந்தவித பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொள்ள நமது இந்திய ராணுவம் தயாராகவே உள்ளது”, என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close