Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போட்டிபோட்டு ஏவுகணைச் சோதனைகள்: பதறும் கொரிய தீபகற்பம்!

வடகொரியா, north korea

உலக நாடுகளின் எதிர்ப்பைத் தாண்டியும், பல தடைகளை மீறியும் இன்று மீண்டும் ஏவுகணைச் சோதனையை நடத்தியுள்ளது வடகொரியா எனக் குற்றம் சாட்டியிருக்கிறது தென்கொரியா. கிழக்குத் திசை நோக்கி வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியதாக ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளது தென்கொரியா. அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை, உலக நாடுகளின் எதிர்ப்புகள், பொருளாதாரத் தடைகள் என எதையுமே பொருட்படுத்தாத வடகொரியா, சமீபகாலமாகப் பலமுறை அணுகுண்டுச் சோதனைகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது. இது, கொரியத் தீபகற்பத்தில் கடும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. வடகொரியாவுக்கு சவால்விடும் தொணியில் நேற்று முன்தினம் தென்கொரியாவும் ஏவுகணைச் சோதனையை நடத்திக் காட்டியது. 

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைத் தயாரித்துப் பரிசோதிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறது வடகொரியா. இதனால், சற்று அச்சத்தில் இருக்கிறது தென்கொரியா. காரணம், தென்கொரியாவில் அதிக அளவில் அணு மின் நிலையங்கள் உள்ளன. அவற்றின்மீது வட கொரியா தனது ஏவுகணைகளைப் பிரயோகித்தால், எதிர்பார்க்க முடியாத அளவுக்கு சரிவைச் சந்திக்கும் தென்கொரியா. இந்நிலையில், அமெரிக்காவை மட்டும் நம்பி பிரயோஜனம் இல்லை என்பதால், தானும் ஏவுகணைச் சோதனைகளைச் செய்துபார்க்கக் களமிறங்கிவிட்டது தென்கொரியா. இதன் எதிரொலியாகவே, ஏவுகணையைச் சோதித்துப்பார்த்திருக்கிறது தென்கொரியா. பெரும் விளம்பரத்துடன் இந்தச் சோதனையை நிகழ்த்தி, வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்நிலையில், வடகொரியாவின் தலைநகரான பியாங் யாங் நகரிலிருந்து கிழக்கு நோக்கி வடகொரியா ஏவுகணையை ஏவி, சோதனை நடத்தியதாகக் கூறியுள்ளது தென்கொரியா. இதுகுறித்து அமெரிக்கா மற்றும் தென்கொரிய கூட்டுப்படையினர், ஆய்வுகள் நடத்தி வருகின்றனர் எனக் கூட்டுப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தால், அங்கு பதற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close