Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து என்னால் மீளவே முடியலை!” - வீஜே சனா

க்கள் தொலைக்காட்சியில் 'ரெட்டை வால் குருவி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், சனா. தற்போது, அதே தொலைக்காட்சியில் 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' என்கிற நிகழ்ச்சியையும், வசந்த் தொலைக்காட்சியில் 'உலகத்திரை' என்கிற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிவருகிறார். தவிர, பிசினஸிலும் பின்னியெடுத்து வருபவரோடு ஒரு தேநீர் நேரச் சந்திப்பு... 

“சனா, மீடியாக்குள் வந்த பாதையைச் சொல்லுங்களேன்” 

“நான் படிச்சதெல்லாம் சென்னையில்தான். இன்ஜினீயரிங் படிக்கும்போதே நிறைய நிறுவன நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி இருக்கேன். அப்புறம் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்தபோதும், விடுமுறை நாள்களில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிட்டு இருந்தேன். அப்போதான் வசந்த் டி.வி-யின் ஆடிஷன் பற்றி தெரிஞ்சது. அதில் கலந்துகிட்டு செலக்ட் ஆனேன். இப்படிதான் என்னுடைய மீடியா பயணம் ஆரம்பிச்சது.'' 

சனா

''மக்கள் டி.வியில் தூயத் தமிழில் பேசணுமே... எப்படித் தயாரானீங்க?'' 

''நான் தமிழ்நாட்டு பொண்ணுதான். ஆனாலும், பெரும்பாலும் ஆங்கிலம் கலந்தே பேசி பழகிடுச்சு. மக்கள் டி.வியில் ஆங்கிலம் கலந்து பேசக் கூடாதுங்கறது முக்கிய நிபந்தனை. ஆரம்பத்தில் கஷ்டமா இருந்தாலும், அந்தச் சவாலை சந்தோஷமா ஏற்று புதுப்புது தமிழ் வார்த்தைகளைக் கற்க ஆரம்பிச்சேன். இப்போ, திடீர்னு தூயத் தமிழில் பேசுனு சொன்னாலும் பேச முடியும். அந்த அளவுக்கு முன்னேறிட்டேன்.'' 

''உங்களுடைய கனவு என்ன?'' 

''பிசினஸ் பெண்ணாகச் சாதிக்கிறதுதான் என்னுடைய நீண்ட நாள் கனவு. அதுக்கான ஆரம்பமாக 'கலாட்டா ஈவண்ட்ஸ்' என ஒரு பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன். படிப்படியாக உயர்ந்து சாதிக்கணும். அதுக்காக, ஒரு நிமிஷத்தையும் வீணாக்காமல் உழைச்சுட்டிருக்கேன். நியூஸ் ரீடராகும் எண்ணமும் இருக்கு.'' 

“அப்படின்னா நடிக்கும் ஆர்வமும் இருக்கணுமே...'' 

''நிறைய ஷார்ட் ஃபிலிம்ல நடிச்சிருக்கேன். சின்னத்திரையில் நடிக்கிறதுக்கும் ஆர்வம் இருக்கு. பிசினஸில் அதிக நேரம் செலவழிக்கிறதால், நடிப்பை தள்ளிவெச்சிருந்தேன். இனி, சின்னத்திரை நடிகையாகவும் மாறுவேன்.''

சனா

''உங்க 'கலாட்டா ஈவண்ட்ஸ்' பற்றி...''

''பிசினஸ் ஆரம்பிக்கும் ஆசை இருந்தாலும் காசு முதல் பிரச்னையா இருந்துச்சு. நானும் என் ஃப்ரண்ட் கார்த்தியும் சேர்ந்து 2016-ம் வருஷம் இந்த ஈவண்ட் கம்பெனியை ஆரம்பிச்சோம். எங்களுக்கு உதவியா  நண்பர்களும் கைகொடுத்தாங்க. இப்போ, 10 பேர் கலாட்டா ஈவண்ட்ஸுக்காக உழைச்சுட்டிருக்கோம். மேரேஜ், ரிசப்ஷன், பிறந்தநாள் விழா போன்றவற்றை இந்த கம்பெனி வழியே ஏற்பாடு செய்துதருகிறோம். கலாட்டா ஈவண்ட்ஸை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துறதுக்காக, பிளான் பண்ணி உழைச்சுட்டிருக்கோம்.''

''உங்க ஹாபி என்ன?'' 

''எனக்கு பியூட்டி புராடெக்ஸ் கலெக்ட் பண்றது ரொம்பவே பிடிக்கும். ஆன்லைன் ஷாப்பிங்கில் என்னை மிஞ்சிக்க முடியாது. டைம்பாஸ் ஆகலன்னாலும் ஆன்லைன் ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சிருவேன்'' 

''வாழ்நாளில் மறக்க முடியாத நபர் யார்?'' 

''என் ஃப்ரண்டோட ஃப்ரண்ட். நாங்க எல்லாரும் கேங்கா எங்களோட கலாட்டா பிசினஸ் வேலைகளைச் செய்வோம். எப்பவும் கலகலனு பேசிட்டே இருக்கும் டைப் அவன். ஒருநாள் அவசரமா பொருள்கள் தேவைப்படுதுனு அவனுக்கு போன் பண்ணி சீக்கிரம் வரச்சொன்னோம். ஆனால், ரொம்ப நேரமாகியும் வரவே இல்லை. ஃபோன் ஸ்விட்ச் ஆப்லயே இருந்துச்சு. ஒரு வாரத்துக்கு அப்புறமாதான் வண்டியில் வேகமாக வரும்போது விபத்தில் சிக்கி இறந்துட்டான்னு தெரிஞ்சது. எங்களால்தான் அவன் இறந்துட்டாங்கிற ஒரு குற்ற உணர்ச்சி எனக்குள்ள உறுத்திட்டேயிருக்கு. அவன் அம்மா, அப்பா முகத்தில் முழிக்க முடியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டேன். விபத்தில் யாராவது இறந்துட்டாங்கனு கேள்விபட்டாலே எனக்கு அவன் நினைப்புதான் வரும். இப்போ மட்டுமில்லே, எப்பவுமே அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து என்னால் மீண்டு வரவே முடியாது.'' 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close