வெளியிடப்பட்ட நேரம்: 11:41 (15/09/2017)

கடைசி தொடர்பு:11:59 (15/09/2017)

ரிசார்ட்டில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் குறித்து கமல் கடும் விமர்சனம்

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், தற்போது கர்நாடகாவில் இருக்கும் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்கு, போராட்ட நாள்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இன்று நீதிமன்றமும், தடையை மீறி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துவது குறித்து தனது கண்டனத்தைப் பதிவுசெய்தது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.  அதில் அவர், “வேலை செய்யாவிட்டால் சம்பளம் இல்லை என்பது அரசு ஊழியருக்கு மட்டும்தானா? ரிசார்ட்டில் தங்கி குதிரை பேரம் நடத்தும் அரசியல்வாதிகளுக்குப் பொருந்தாதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், “போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை நீதிமன்றம் எச்சரித்துள்ளது போலவே, ரிசார்ட்டில் தங்கி வேலை செய்ய மறுக்கும்  சட்டமன்ற உறுப்பினர்களையும் எச்சரிக்க வேண்டும்” எனவும் கூறியுள்ளார்