Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அக்டோபர் 4-ம் தேதி வருகிறது கூகுள் பிக்ஸல் 2 #Pixel2

ந்த வருடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 8 மற்றும் ஐபோன் 10 (iPhone X), ஆகிய இரண்டையும் கடந்த 12-ம் தேதி வெளியிட்டு, தன் கடமையை நிறைவேற்றிவிட்டது ஆப்பிள். இப்போது, கூகுளின் டர்ன்!

கடந்த வருடம் வெளியிட்ட கூகுள் பிக்ஸல் மொபைலின் அடுத்த வெர்ஷனை வெளியிடத் தயாராகிவருகிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 4-ம் தேதி, தன்னுடைய பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL ஆகிய இரண்டு மாடல்களையும் கூகுள் நிறுவனம் அறிமுகம்செய்தது. இந்த வருடமும் அதே நாளில் பிக்ஸல் 2 மொபைலை வெளியிடத் திட்டமிட்டுள்ளது கூகுள். 

கூகுள் பிக்ஸல்

அதிகத் திறன் மிக்க கேமரா, துல்லியமான வாய்ஸ் அசிஸ்டன்ட், அதிக மெமரி, நீடித்த பேட்டரி போன்றவற்றைத் தன்னுடைய விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது கூகுள்.

 

 

எனவே, 4 GB ரேம், ஆண்ட்ராய்டு ஓரியோ ஓ.எஸ், அதிகத் திறன்கொண்ட பேட்டரி, பெஸல் லெஸ் டிஸ்ப்ளே, வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் மற்றும் பிக்ஸல் 1-ஐ விடவும் திறன்மிக்க கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் பிக்ஸல் 2-வில் இடம்பெறலாம். கடந்த வருடமும் இதே அக்டோபர் 4-ம் தேதிதான் கூகுள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL என்னும் இரண்டு மாடல்களையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement